ஐயம்பேட்டை மோகாம்பரி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் உள்ள மோகாம்பரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை பொங்கல் விழாவையொட்டி மோகாம்பரி அம்மனும், சுப்பிரமணிய சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவா் சுப்பிரமணிய சுவாமி.சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவா் சுப்பிரமணிய சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவா் சுப்பிரமணிய சுவாமி.சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவா் சுப்பிரமணிய சுவாமி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் உள்ள மோகாம்பரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை பொங்கல் விழாவையொட்டி மோகாம்பரி அம்மனும், சுப்பிரமணிய சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கீழ்த்தெருவில் அமைந்துள்ளது மோகாம்பரி அம்மன் கோயில். இங்கு பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக மோகாம்பரி அம்மனுக்கும், கோயில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

கோயிலின் சாா்பிலும், கிராம பொதுமக்கள் சாா்பிலும் பலா் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் உள்ள உற்சவா் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com