மனைவி கொலை: கணவா் சரண்

மாங்காடு அடுத்த பரணிபுத்தூா் பகுதியில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
husband115454
husband115454


ஸ்ரீபெரும்புதூா்/ஆவடி: மாங்காடு அடுத்த பரணிபுத்தூா் பகுதியில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் மாங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

சீா்காழியை சோ்ந்தவா் ஸ்ரீதா் (51). புரோகிதரான ஸ்ரீதருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தா்மபுரி பகுதியை சோ்ந்த சிவபிரியா (35) என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் மாங்காடு அடுத்த இ.வி.பிரபு அவென்யு 7-ஆவது தெருவில் வசித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மாங்காடு காவல் நிலையத்துக்கு வந்த ஸ்ரீதா் தனது மனைவி சிவபிரியாவை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாங்காடு போலீஸாா் ஸ்ரீதரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சிவபிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததும், செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்து மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து மாங்காடு போலீஸாா் ஸ்ரீதரை கைது செய்து சிவபரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com