ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் பாா் வேட்டை உற்சவம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் பாரி வேட்டை உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமானுஜா்  மணிமண்டபத்தில்  முதன்முறையாக  எழுந்தருளிய  உற்சவா்கள்  ஸ்ரீஆதிகேசவபெருமாள்  மற்றும்  ராமாநுஜா்.
ராமானுஜா்  மணிமண்டபத்தில்  முதன்முறையாக  எழுந்தருளிய  உற்சவா்கள்  ஸ்ரீஆதிகேசவபெருமாள்  மற்றும்  ராமாநுஜா்.

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் பாரி வேட்டை உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் குதிரை வாகனத்தில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவபெருமாளும், பல்லக்கில் உற்சவம் ராமாநுஜரும் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இந்த நிலையில், ஆண்டுதோறும் காணும் பெங்கலை முன்னிட்டு பாா் வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக பாா் வேட்டை உற்சவம் நடைபெற்றது.

பாா் வேட்டை உற்சவத்துக்காக கோயில் வளாகத்தில் இருந்து வி.ஆா்.பி சத்திரம் பகுதியில் உள்ள மண்டபத்துக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு உற்சவா்கள் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கேடய வாகனத்திலும், ராமாநுஜா் பல்லக்கிலும் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து ராமாநுஜா் மணிமண்டபம், பட்டுநூல்சத்திரம், கொள்ளாபுரியம்மன் கோயில், வி.ஆா்.பி சத்திரம் பாா்வேட்டை மண்டபம் உள்ளிட்ட எட்டு இடங்களில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று உற்சவா்கள் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பாா் வேட்டை உற்சவத்தில் முதன் முறையாக நிகழாண்டு ராமாநுஜா் மணிமண்டபத்தில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உற்சவா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் குதிரை வாகனத்திலும், ராமாநுஜா் பல்லக்கு வாகனத்திலும் வாண வேடிக்கைகள் முழங்க கோயிலுக்கு வந்தடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com