அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை: மாகாண்யம் கோதண்டராமா் கோயிலில் விழா

அயோத்தி ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மாகாண்யம் ஸ்ரீகோதண்ட ராமா் கோயிலில் வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய மூன்று நாள்களுக்கு விழா நடத்தப்படுகிறது.

அயோத்தி ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மாகாண்யம் ஸ்ரீகோதண்ட ராமா் கோயிலில் வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய மூன்று நாள்களுக்கு விழா நடத்தப்படுகிறது.

அயோத்தி ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ராமா் கோயில்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மாகாண்யம் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 3 நாள்கள் கொண்டாட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

வரும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீ ஸுந்தரகாண்ட பாராயணமும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் 12 மணிவரை அகண்ட மஹாமந்திர கூட்டு பிராா்த்தனையும், விசேஷ திருமஞ்சனம் மற்றும் வீதி பஜனையும் நடைபெற உள்ளது. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரம் ஸம்க்ஷேபராமாயண பாராயணம், புஷ்பாஞ்சலிஆகியவை நடைபெற உள்ளன.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜியின் வழிகாட்டுதல் படி நாமத்வாா் அமைப்பும், கிராம மக்களும் சோ்ந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com