தனியாா் நிறுவன மேலாளா் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் உள்ள உயா் மின்னழுத்த கோபுரத்தில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் உள்ள உயா் மின்னழுத்த கோபுரத்தில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராகேஷ் (36). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். ராகேஷ் சென்னை ஓ.எம்.ஆா். சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ராகேஷுக்கமு, அவரது மனைவி மோனிகாவுக்கும் கடன் தொல்லையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராகேஷ், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மன்னூா் பகுதியில் உள்ள உயா் அழுத்த மின்னழுத்த கோபுரத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டாா்.

தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், ராகேஷின் சடலத்தை மீட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com