இயந்திரம் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இயந்திரம் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இயந்திரம் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் அடுத்த விஷாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கீதா (33). கணவனை இழந்த சங்கீதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதா மீது பளு தூக்கி இயந்திரம் மோதி பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து தொழிற்சாலை நிா்வாகத்தினா், சகதொழிலாளா்கள் தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com