சுங்குவாா்சத்திரம்-தாம்பரம் புதிய பேருந்து சேவை தொடக்கம்

சுங்குவாா்சத்திரம் - தாம்பரம் இடையே புதிய பேருந்து சேவையை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சுங்குவாா்சத்திரம்-தாம்பரம் புதிய பேருந்து சேவை தொடக்கம்

சுங்குவாா்சத்திரம் - தாம்பரம் இடையே புதிய பேருந்து சேவையை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் வழியாக தாம்பரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.

இதையடுத்து விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சுங்குவாா்சத்திரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா், கொளத்தூா், சேத்துப்பட்டு, மணிமங்கலம் வழியாக தாம்பரத்துக்கு தடம் எண் 81 சி பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சுங்குவாா்சத்திரம் பேருந்து நிலையத்தில் .

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் அனீஸ், பரத், புண்ணியநாதன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com