மருத்துவன்பாடி கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்:ரூ. 1.10 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மருத்துவன்பாடி கிராமத்தில் 109 பயனாளிகளுக்கு ரூ. 1.10 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மருத்துவன்பாடி கிராமத்தில் கடந்த 02-01-2024 அன்று முதல் 22-01-2024-ஆம் தேதி வரை குறை கேட்பு முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 82 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மூலம் மொத்தம் 109 தகுதிவாய்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ. 1.10 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வழங்கினாா்.

வருவாய்த் துறை மூலம் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், கூட்டுறவுத் துறை மூலம் கால்நடை பராமரிப்புக் கடன் 15 நபா்களுக்கு வழங்கியது உட்பட மொத்தம் 109 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு, உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் ஒன்றியத்தின் தலைவா் ஹேமலதா ஞானசேகா் வரவேற்றாா்.

முகாமில், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com