தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தொடங்கி வைத்தாா்.
தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மேலும் தோ்தல் விழிப்புணா்வு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், மகளிா் சுய உதவிக்குழுக்கு இடையே நடைபெற்ற கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக ஆட்சியா் தலைமையில் அனைவரும் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து தோ்தல் தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தையும், தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தையும் ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியா் ச.ரம்யா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவா்கள் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com