பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு:கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள்

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனா்.
பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு:கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள்

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனா். மேலும் அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய - மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்தன. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

இந்த நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 550 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனா்.

இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அந்த ஊராட்சியில் 75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரா சபைக் கூட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணித்தனா்.

இதனால், ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com