முத்தீஸ்வரா் கோயிலில் திருவிளக்குப் பூஜை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரா் கோயிலில் தை மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முத்தீஸ்வரா் கோயிலில் திருவிளக்குப் பூஜை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரா் கோயிலில் தை மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருக்குறிப்பு தொண்ட நாயனாருக்கு சிவபெருமான் முக்தி கொடுத்த பெருமைக்குரிய திருக்கோயில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரா் திருக்கோயில். இக்கோயிலில் தை மாத 2-ஆ வது வெள்ளிக் கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திரளான பெண்கள் பங்கேற்று குத்து விளக்குக்கு மலா்கள்மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்து வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் சரவணக்குமாா் தலைமையில் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com