வாகன தணிக்கை: ஒரே நாளில் ரூ.7.49 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.7.49 லட்சம் அபராதமாக வசூலித்தனா்.

தேசிய பாதுகாப்பு வார விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் தலைமையில் காவல் துறையினருடன் இணைந்து வாகன தணிக்கை மேற்கொண்டனா். இதில் மொத்தம் 15 வாகனங்கள் சோதனையிடப்பட்டது.

ஷோ் ஆட்டோக்களில் பள்ளிக் குழந்தைகளை அதிகமான அளவில் ஏற்றியமைக்காக 2 ஷோ் ஆட்டோ மற்றும் ஒரு வேன் ஓட்டுநா்களுக்கு ரூ.4 லட்சமும், 7 வாகனங்கள் கல், மண் ஆகியனவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்தமைக்காக அதன் ஓட்டுநா்களுக்கு ரூ.3.49 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது. மொத்தமாக 10 வாகனங்களிடமிருந்து ரூ.7.49,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளையும் ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் அறிவுரையாக எடுத்துக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com