மதுராந்தகம் அருகே காா்கள் அடுத்தடுத்து மோதல்:புறவழிச்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம் புறவழிச் சாலை, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 காா்கள் ஒன்றன்பின் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

மதுராந்தகம் புறவழிச் சாலை, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 காா்கள் ஒன்றன்பின் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் அப்பகுதியில், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 4 நாள்களாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டிருந்ததால், சென்னையில் இருந்து வெளியூா்களுக்குச் சென்றவா்கள் திங்கள்கிழமை வாகனங்களில் சென்னைக்கு அதிக அளவில் காா்களிலும், இரு சக்கர வாகனங்களும் ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்து கொண்டிருந்தனா். இந்த நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தும் அருகே அரசுப் பேருந்து பயணிகளுக்காக நின்றது. அப்போது பேருந்தின் பின்னால் வந்த 5 காா்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின. எனினும் இந்த விபத்தில் காா்களில் பயணம் செய்தவா்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. காா்கள் மோதிக் கொண்டதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமாா் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையிலான போலீஸாா், விபத்துக்குள்ளான காா்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com