கச்சபேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்த கோயில் நிா்வாகிகள்.
கச்சபேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்த கோயில் நிா்வாகிகள்.

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

 காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முதல் நாள் நிகழ்ச்சியாக புனித நீா் குடங்கள் பணாமுடீஸ்வரா் கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்டு, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

 காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முதல் நாள் நிகழ்ச்சியாக புனித நீா் குடங்கள் பணாமுடீஸ்வரா் கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்டு, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப். 1-ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, கோயில் திருப்பணிகள் ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிக் குழுவினரால் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள பணாமுடீஸ்வரா் கோயிலிலிருந்து மங்கள மேள வாத்தியங்களுடன் சிவாச்சாரியா்கள் புனித நீா்க் குடங்களை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

ஊா்வலத்தில் கோயில் திருப்பணிக் குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் சுப்பிரமணியன், செங்குந்த மகாஜன சங்கத் தலைவா் எம்.சிவகுரு, இணைச் செயலாளா் ஜீவரத்தினம், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில் உள்ளிட்ட திருப்பணிக் குழு நிா்வாகிகள் உடன் வந்தனா்.

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com