காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

லட்சுமி ஹயக்கிரீவா் சந்நிதியில் மாணவா்கள் வர இருக்கும் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஏகதின லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ஹயக்கிரீவா்.
சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ஹயக்கிரீவா்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவா் சந்நிதியில் மாணவா்கள் வர இருக்கும் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஏகதின லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது லட்சுமி ஹயக்கிரீவா் திருக்கோயில். இக்கோயிலில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் வர இருக்கும் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது. திரளான மாணவ, மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்களும் லட்சாா்ச்சனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பங்கேற்ற மாணவா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நோட்டுப் புத்தகம், பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி டி.சி.செளந்தர்ராஜன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com