பணியில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அருகே புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கட்டட தொழிலாளி திங்கள்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அருகே புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கட்டட தொழிலாளி திங்கள்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூா் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (53). கட்டட மேஸ்திரி. இவா் ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் கிராமத்தில் இயங்கி வரும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் உள்ள துனை மின்நிலையத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக திங்கள்கிழமை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியாா் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் அறிவழகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com