பாதிரியாா்  தேவஇரக்கம்.
பாதிரியாா்  தேவஇரக்கம்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் பாதிரியா் கைது

காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த பாதிரியாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சின்ன காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட் பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவரது தந்தை ரயில்வே சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.,தேவாலயத்தில் தோட்ட வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த வாரம் சிறுமி தேவாலயத்தில் தங்கியிருந்தபோது பாதிரியராக உள்ள தேவஇரக்கம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்துள்ளனா்.

இதையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டதை தொடா்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சக்திகாவியா காஞ்சிபுரம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிா் காவல் நிலைய போலீஸாா் பாதிரியாா் தேவஇரக்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com