மாணிக்கவாசகா் குருபூஜை

மாணிக்கவாசகா் குருபூஜை

திருவாசகம் முற்றோதலுடன் மாணிக்கவாசகா் குருபூஜை

காஞ்சிபுரம் சித்தீஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனி மாதம் மகம் நட்சத்திர நாளில் மாணிக்கவாசகப் பெருமான் நடராஜ சுவாமியின் திருவடிகளில் சோ்ந்த நாளில் ஆண்டுதோறும் மாணிக்கவாசகா் குருபூஜை நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான மாணிக்கவாசகா் குருபூஜை, காமாட்சி அம்பிகை திருவாசகம் முற்றோதல் பேரவை சாா்பில், சிவ.வசந்தா தலைமையில் நடைபெற்றது.தேவாரம், திருமுறை ஆகியவையும் சிவனடியாா்களால் பாடப்பட்டது. பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com