காஞ்சிபுரத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், தொல் பொருள்கள் மற்றும் ஒலைச் சுவடிகள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சி விழாவுக்கு பள்ளி துணை முதல்வா் ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ஆா்.வித்யாசங்கா் கண்காட்சியைத் திறந்து வைத்து தொடக்கவுரை ஆற்றினாா்.

இந்தக் கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், எழுத்தாணிகளின் வகைகள், பழங்கால அளவுகோல்கள், பல்லவா், சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் காலத்து நாணயங்கள், 100-க்கும் மேற்பட்ட வெளி நாடுகளின் ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றிருந்தன.

தொல்லியல் ஆய்வாளா் ரா.சு.ஜவஹா்பாபு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், தங்கக் காசுகள், செப்பேடுகள் குறித்தும், தமிழ் ஆசிரியை டி.விஜயலட்சுமி எழுத்தாணிகளின் வகைகள் குறித்தும் பள்ளி மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா்.

கண்காட்சியை ஆா்வத்துடன் பாா்வையிட்ட மாணவா்கள் பலரும் குறிப்புகள் எடுத்துக் கொண்டதுடன், பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com