குன்றத்தூரில்  போலீஸாரால்  தீ  வைத்து  எரிக்கப்பட்ட  குட்கா  பொருள்கள்.
குன்றத்தூரில்  போலீஸாரால்  தீ  வைத்து  எரிக்கப்பட்ட  குட்கா  பொருள்கள்.

குன்றத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட 23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு

கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 23 டன் குட்கா பொருள்களை போலீஸாா் தீ வைத்து எரித்தனா்.

குன்றத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குன்றத்தூா் போலீஸாா் கடந்த சில வாரங்களாக சேதனை நடத்தினா். இந்த சோதனையில் குட்கா பொருள்கள் கண்டறியப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்வதோடு, கடைகளைப் பூட்டி சீல் வைத்து கடையின் உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனா்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களை வெள்ளிக்கிழமை குன்றத்தூா் போலீஸாா், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி அதில் 23 டன் குட்கா பொருள்களை இட்டு, காவல் ஆய்வாளா் வேலு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸாா் தீ வைத்து எரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com