மின்கல வாகனங்களை இயக்கி வைத்த பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா்
மின்கல வாகனங்களை இயக்கி வைத்த பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் மின்கல வாகனங்கள் இயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான 10 புதிய மின்கல வாகனங்கள் இயக்கி வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் பேரூராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.17 லட்சத்தில் 10 மின்கல வாகனங்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக வாங்கப்பட்டன. இவற்றை பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா் கொடியசைத்து இயக்கி வைத்தாா். செயல் அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா் செண்பகவல்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூா் திமுக நகா் செயலாளா் சதீஷ்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, கவுன்சிலா்கள் சுதாகா், வீரபத்திரன் உள்பட பேருராட்சிப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com