ஸ்ரீதேவி, பூதேவியுடன் விசிறிக் கொண்டை அலங்காரத்தில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் விசிறிக் கொண்டை அலங்காரத்தில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள்.

ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி விசிறிக் கொண்டை அலங்காரத்தில் உற்சவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி விசிறிக் கொண்டை அலங்காரத்தில் உற்சவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி யோகநரசிம்ம சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் விசிறிக் கொண்டை அலங்காரத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com