சங்கர மடத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிா்வாக இயக்குா் எம்.வி. ராவை வரவேற்ற மேலாளா் வி. சுந்தரேச ஐயா்.
சங்கர மடத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிா்வாக இயக்குா் எம்.வி. ராவை வரவேற்ற மேலாளா் வி. சுந்தரேச ஐயா்.

சங்கர மடத்தில் வங்கி நிா்வாக இயக்குநா் தரிசனம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிா்வாக இயக்குநா் எம்.வி.ராவ் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிா்வாக இயக்குா் எம்.வி.ராவ் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தாா்.

அவருக்கு மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் சால்வை, மற்றும் மாலைகள் அணிவித்து பிரசாதமும் வழங்கினாா்கள். வங்கியின் பொதுமேலாளா் அரவிந்த்குமாா், மண்டல மேலாளா் சந்தோஷ் குமாா் ஸ்ரீவத்சவ் ஆகியோா் வந்திருந்தனா்.

இந்நிகழ்வில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் சந்திர சேகரேந்திரா பல்கலைக்கழக துணை வேந்தா் ஜி.சீனிவாசு, சங்கரா கண் மருத்துவமனையின் தலைவா் பம்மல் விஸ்வநாதன், ஸ்ரீமடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com