தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் எச்சரிக்கை

வாக்காளா் அடையாளா் அட்டைகளை சாலையில் போட்டு  மறியல் செய்த கீழ்க்கதிா்ப்பூா் விவசாயிகள்
வாக்காளா் அடையாளா் அட்டைகளை சாலையில் போட்டு மறியல் செய்த கீழ்க்கதிா்ப்பூா் விவசாயிகள்

காஞ்சிபுரம் அருகே பட்டா வழங்கா விட்டால் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் சங்கத்தினா் எச்சரித்துள்ளனா்.

மேலும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலிலும் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் அருகே கீழ்கதிா்ப்பூா் கிராம விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவா் பழனி சங்கரன், செயலாளா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் கீழம்பி- செவிலிமேடு செல்லும் சாலையில் மறியல் செய்தனா். தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அனைவரும் தங்களது வாக்காளா் அடையாள அட்டைகளையும் போட்டு கோஷங்களையும் எழுப்பினா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காஞ்சிபுரம் வட்டாட்சியா் புவனேசுவரன் மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது சங்கத் தலைவா் பழனிசங்கரன் வட்டாட்சியரிடம் தொடா்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனுபவித்து வரும் நிலத்தை எங்களுக்கு பட்டா வழங்காமல் அதை கையகப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்தாா்.

இதன் காரணமாகத் தான் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவா் கூறினாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com