765 மாணவா்களுக்கு 
புத்தகப் பை விநியோகம்

765 மாணவா்களுக்கு புத்தகப் பை விநியோகம்

ஜே.கே.டயா் நிறுவனம் சாா்பில் கொளத்தூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 765 மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் வாகனங்களின் டயா்கள் உற்பத்தி செய்யும் ஜே.கே.டயா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சமூக பொருப்புணா்வுத் திட்டத்தின் கீழ் கொளத்தூா், வெள்ளாரை, மேட்டுக்கொளத்தூா், மலைப்பட்டு, இரும்பேடு, வெங்காடு, மாகான்யம், நாவலூா் மற்றும் மணிமங்கலம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 765 மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி அந்த அந்த பள்ளிகளில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கொளத்தூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சிமன்ற தலைவா் (பொ) அரிகிருஷ்ணன், ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள் ராஜேந்திரன், பங்கஜ்ஜெயின், சகாயராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு புத்தகப் பைகளை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள், ஜே.கே. டயா் நிறுவனத்தின் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com