சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமானுஜா்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமானுஜா்.

காஞ்சிபுரம் ராமானுஜா் கோயிலில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் ராமானுஜா் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் ராமானுஜா் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன. காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் மூலவா் ராமானுஜா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com