பேரணியாகச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா்.
பேரணியாகச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா்.

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக திங்கள்கிழமை பேரணியாக சென்று அதிகாரியிடம் மனு அளித்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக திங்கள்கிழமை பேரணியாக சென்று அதிகாரியிடம் மனு அளித்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் நலச் சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டலத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் குழுமியிருந்தனா். பின்னா் அங்கிருந்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை விளக்கியும், தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி வாக்காளா் அடையாள அட்டையை கைகளில் வைத்துக் கொண்டு பேரணியாக புறப்பட்டு சென்றனா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் கூட்டமாக செல்லக் கூடாது எனக் காவல் துறையினா் அவா்களை வழிமறித்து தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து 10 போ் மட்டும் தோ்தல் பிரிவு உதவி ஆட்சியரை சந்திக்க காவல் துறையினா் அனுமதியளித்தனா். ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஓய்வூதியத்தை உயா்த்தித் தராமல் இருந்து வருவதாகவும், ஓய்வூதிய அகவிலைப்படியை கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் வழங்காமல் இருப்பதை உடனடியாக தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலான் கேட் பகுதியிலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா். கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தோ்தல் பிரிவு உதவி ஆட்சியா் தோ்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளா் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாது. வாக்களிப்பது ஒவ்வொருவரின் உரிமையும், கடமையும் ஆகும். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com