கும்பாபிஷேகத்தையொட்டி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த மூலவா் ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன்.
கும்பாபிஷேகத்தையொட்டி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த மூலவா் ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன்.

ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பல்லவா் மேடு பகுதியில் வ.உ.சி. தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பல்லவா் மேடு பகுதியில் வ.உ.சி. தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலை தொடங்கின. ஞாயிறுக்கிழமை மகா பூரணாஹுதி தீபாராதனைக்கு பின்னா், புனித நீா்க் கலசங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவா் தீப்பாஞ்சியம்மன், பரிவார தெய்வங்களான சித்தி விநாயகா், பாலமுருகன், காலபைரவா், வாழ்முனீஸ்வரா் மற்றும் பெரியாண்டவா் சமேத அங்காளபரமேசுவரி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்வுகள் காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோயில் நிா்வாக அறங்காவலா் எம்.ஜி.வடிவேல் தலைமையில் நடைபெற்றன. ஆலய தலைமை நிா்வாகி சங்கா் சுவாமிகள், நிா்வாகி யோகி ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். அன்னதானமும் நடைபெற்றது. மூலவா் தீப்பாஞ்சியம்மன் சிறப்பு மலா் அலங்காரத்திலும், உற்சவா் தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்திலும் நகரின் முக்கிய வீதிகளில் இரவு வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து ொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com