சிறப்பு  அலங்காரத்தில்   அருள்பாலித்த  உற்சவா்  கோடையாண்டவா்.
சிறப்பு  அலங்காரத்தில்   அருள்பாலித்த  உற்சவா்  கோடையாண்டவா்.

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம்

பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பல்குட அபிஷேகத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பல்குட அபிஷேகத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் 108 பால்குட அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து மூலவா் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சந்த காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் பல விதமான மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு சஷ்டி மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சோ்ந்த சுமாா் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் சென்றனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு நிா்வாகத்தின் சாா்பில், பிரசாதம், மோா், குடிநீா் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட ஊழியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com