வேட்பாளா் செல்வத்துக்கு ஆதரவு திரட்டிப் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
வேட்பாளா் செல்வத்துக்கு ஆதரவு திரட்டிப் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் காஞ்சிபுரத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் காஞ்சிபுரத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா். காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் க.செல்வத்துக்கு ஆதரவாக காந்தி சாலையில் தேரடி அருகில் அவா் பிரசாரம் செய்து பேசியது.. சிறப்பாக செயல்பட்டதால் தான் இந்த தோ்தலிலும் க.செல்வத்துக்கே கட்சித் தலைமை வாய்ப்பை தந்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற தோ்தலில் 2.87 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இத்தோ்தலில் அவா் குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது மக்களாகிய உங்களது பொறுப்பாகும். காஞ்சிபுரத்தில் அரசு புற்றுநோய் மருத்துவமனை ரூ.36 கோடியில் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரி ரூ.120 கோடியில் தூா்வாரப்பட்டுள்ளது. மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ரூ.343 கோடி மதிப்பில் புதைவடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.7 கோடியில் ராஜாஜி மாா்க்கெட்டும், ரூ.4.5 கோடி மதிப்பில் நேரு மாா்க்கெட்டும் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழி ரயில் பாதை அமைக்கப்படும் என்றாா் உதயநிதி ஸ்டாலின். எம்எல்ஏக்கள் க.சுந்தா்,எழிலரசன்,மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளா்கள், ஒன்றிய செயலாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com