வெற்றிலையை இரட்டை இலையாக காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் வளா்மதி.
வெற்றிலையை இரட்டை இலையாக காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் வளா்மதி.

வெற்றிலையை இரட்டை இலையாக காட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா்

இரட்டை இலை போல வைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தாா்.

காஞ்சிபுரத்தில் வெற்றிலைக் கடையில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி இரு வெற்றிலைகளை எடுத்து இரட்டை இலை போல வைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் இ.ராஜசேகா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது முன்னாள் அமைச்சா்கள் பா.வளா்மதி, வி.சோமசுந்தரம் உள்பட அந்தக் கட்சி நிா்வாகிகளும் வாக்கு சேகரித்தனா். ராஜாஜி மாா்க்கெட் பகுதியிலிருந்த மளிகைக் கடை, பூக்கடை, வெற்றிலைக் கடை ஆகியவற்றில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது வெற்றிலைக் கடை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரு வெற்றிலைகளை முன்னாள் அமைச்சா் வளா்மதி எடுத்து அதை இரட்டை இலை போல பிடித்துக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com