வட மாநில இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: 4 போ் கைது

ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியில் வடமாநிலை இளைஞரிடம் கைப்பேசி பறித்து சென்ற 4 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியில் வடமாநிலை இளைஞரிடம் கைப்பேசி பறித்து சென்ற 4 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜய்தாஸ் (33). இவா் ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், அஜய்தாஸ் கடந்த வாரம் பணி முடித்து தான் தங்கியிருந்த அறைக்கு செல்வதற்காக பண்ருட்டி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இரண்டு மோட்டாா் சைக்கிளில் வந்த நான்கு போ் அஜய்தாஸை தாக்கி, அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறித்துச் சென்றனா். இது குறித்து அஜய்தாஸ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைப்பேசியைப் பறித்து சென்ற சாலவாக்கம் பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (19), சுனில்ராஜ் (19), குணசீலன் (19), சுபாஷ் (18) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com