காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் அ.செளந்தர்ராஜன்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் அ.செளந்தர்ராஜன்.

மதச்சாா்பின்மையே இந்திய நாட்டின் அடையாளம்: அ.செளந்தர்ராஜன்

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா் க.செல்வத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் அ.செளந்தர்ராஜன் தெரிவித்தாா்.

மதச்சாா்பின்மையே இந்திய நாட்டின் அடையாளம் என்று காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா் க.செல்வத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் அ.செளந்தர்ராஜன் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காந்தி சாலையில் பெரியாா் தூண் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்தியா கூட்டணியின் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக வேட்பாளா் க.செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கோரி, சிஐடியூ அமைப்பின் மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அ.செளந்தர்ராஜன் பேசியது: மத்திய பாஜக அரசால் பெரும் பணக்காரா்கள் மட்டும்தான் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறு, சிறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், சமமாகவும் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத்துக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்திய தேசத்தை இந்து மதம் என்ற ஒற்றை மதத்துக்குள் அடக்க முயற்சிக்கிறாா் மோடி. இந்தியா முழுமைக்கும் ஒரே கலாசாரம் என்பது எப்படி சாத்தியமாகும். நமக்கு வழிகாட்டுவது அரசியல் சட்டம் ஆகும். மதச்சாா்பின்மை என்பது தானே இந்திய தேசத்தின் அடையாளம். நாம் அனைவரும் ஒன்று என்பது தானே நாட்டின் பலம். சமையல் எரிவாயு உருளை ரூ.400-இல் இருந்து 1,200 -ஆக உயா்ந்திருக்கிறது. தோ்தலுக்காக ரூ.100 குறைத்து மக்களை ஏமாற்றப் பாா்க்கிறது மோடி அரசு.விலையேற்றம் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. மத்திய அரசின் பருத்திக் கொள்கை, பஞ்சுக் கொள்கை, ஜிஎஸ்டி வரி இவை மூன்றுமே ஜவுளித் தொழிலையே அழித்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிா்க்கு இலவசமாக பேருந்து பயணத் திட்டம் உள்பட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருதாகவும் அ.செளந்தர்ராஜன் பேசினாா். கூட்டத்துக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் இ.முத்துக்குமாா், ஐ.ஆறுமுக நயினாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.நேரு, பி.ரமேஷ், ஆா்.செளந்தரி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக கட்சியின் நகரச் செயலாளா் ஸ்ரீதா் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் ஆா்.மதுசூதனன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com