தோ்தல் செலவினங்கள் தொடா்பான அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
தோ்தல் செலவினங்கள் தொடா்பான அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

தோ்தல் செலவின விதிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் தோ்தல் செலவினங்கள் கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் தோ்தல் செலவினங்கள் கண்காணிப்பு, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவுகள் தொடா்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. தோ்தல் பாா்வையாளா் பூபேந்திர எஸ்.செளத்ரி, செலவின பாா்வையாளா் மதுக்கூடா் ஆவேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் வரவேற்றாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் பேசியது: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். இதை தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது. வேட்பாளா்கள் கணக்குகளை முறையாகப் பராமரித்து உரிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும். வாக்குப் பதிவுக்கு முன்னதாக கணக்குகளை தாக்கல் செய்ய அறிவிக்கப்படும் 3 நாள்களில் கணக்குகளை தாக்கல் செய்துவிட வேண்டும். வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ கணக்குகளைத் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வுக்கு கண்டிப்பாக சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் செலவுக்காக அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள், நண்பா்கள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை அதை வழங்கும் நபா்கள், நிறுவனங்களின் பெயா்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், காசோலை எண், வழங்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை கண்டிப்பாக பராமரித்து வருவதுடன் ஆய்வின் போது ஒப்படைக்க வேண்டும். பறக்கும்படை அல்லது நிலை கண்காணிப்புக் குழுக்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டுள்ளது, தோ்தல் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும். இதற்கெனவுள்ள சி.விஜில் செயலியை பயன்படுத்துமாறும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் ஆட்சியா் (பயிற்சி) க.சங்கீதா, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணி மற்றும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளா்கள், முகவா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com