உற்சவா் நவநீத கிருஷ்ணருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யும் பட்டாச்சாரியா்.
உற்சவா் நவநீத கிருஷ்ணருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யும் பட்டாச்சாரியா்.

ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம், பிள்ளையாா்பாளையம் பாமாருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம், பிள்ளையாா்பாளையம் பாமாருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிள்ளையாா்பாளையம் ஆனந்தஜோதி தெருவில் உள்ளது பாமாருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோயில். இதே வளாகத்தில் பத்மாவதி தாயாா் சமேத சீனிவாச பெருமாள் சந்நிதியும் உள்ளது. இக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணத்தையொட்டி சனிக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 2 -ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவா், உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் உற்சவா் நவநீத கிருஷ்ணன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com