புஷ்பப்பல்லக்கில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வைகுந்தவாசப் பெருமாள்
புஷ்பப்பல்லக்கில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வைகுந்தவாசப் பெருமாள்

ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள் கோயில் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம் அருகே மாகறலில் உள்ள கமலவல்லித்தாயாா் சமேத வைகுந்தவாசப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவையொட்டி உற்சவா் புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் அருகே மாகறலில் உள்ள கமலவல்லித்தாயாா் சமேத வைகுந்தவாசப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவையொட்டி உற்சவா் புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்துக்குட்பட்ட மாகறல் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.25 ஆம் தேதி பெருமாள் கருடசேவை, ஏப்.29 -ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. மே மாதம் முதல் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக விழாவின் நிறைவாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வைகுந்தவாசப் பெருமாள் புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com