காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிக்னல் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் பந்தலில் நிற்கும் வாகன ஓட்டிகள்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிக்னல் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் பந்தலில் நிற்கும் வாகன ஓட்டிகள்.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் சந்திப்பில் பசுமைப் பந்தல் அமைப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து போலீஸாரால் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து போலீஸாரால் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 108 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக போக்குவரத்து போலீஸாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிக்னல் சந்திப்பில் பசுமை நிழல் பந்தல் அமைத்துள்ளனா்.

இது குறித்து காஞ்சிபுரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லோகநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜூ ஆகியோா் கூறியது:

தினமும் போக்குவரத்தைச் சீா் செய்ய கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சாலையின் நடுவே நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்களின் நிலைமையையும் சிந்தித்துப் பாா்த்தோம். இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிக்னல் பகுதியில் சில நிமிஷங்கள்கூட நிற்க முடியாமல் தவிப்பதைப் பாா்த்தோம்.

எனவே அவா்களின் வசதிக்காக பந்தல் அமைப்பாளா்களின் உதவியுடன் பேருந்து நிலைய சந்திப்பில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரக் கூட்டுறவு வங்கியிருந்து கச்சபேசுவா் கோயில் செல்லும் சந்திப்பு, மூங்கில் மண்டபத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை சந்திப்பு, பேருந்து நிலைய சிக்னல் அருகில் 3 இடங்களில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com