கஞ்சா விற்ற இருவா் கைது

உத்தரமேரூா் அருகே திருப்புலிவனத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உத்தரமேரூா் அருகே திருப்புலிவனத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டத்துக்குட்பட்ட திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினா் சம்பவ இடத்தில் சந்தேகத்துக்குரியவா்களைப் பிடித்து சோதனை செய்ததில் இருவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் உத்தரமேரூா் வட்டம், அன்னாத்தூா் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (27), உத்தரமேரூா் திருப்புலிவனம் துா்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ருத்திரகுமாா் (29) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்து அவா்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com