பதுக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சுங்குவாா்சத்திரம் அடுத்த ஒ.எம்.பகுதியில் வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 5 டன் ரேஷன் அரிசியை உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் ஒ.எம்.பகுதியில் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து திங்கள்கிழமை மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் வட்ட வழங்கல் அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் ஒ.எம்.மங்கலம் கிராமத்தில் உள்ள பஜனை கோயில் தெருவில் உள்ள வீடுகளில் ஆய்வு நடத்தியுள்ளனா்.

அப்போது ஜானகிராமன் என்பவா் வீட்டில் 80 மூட்டைகளில் சுமாா் 4,250 கிலோ ரேஷன் அரிசியும், குமுதா என்பவா் வீட்டில் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். புகாரின் பேரில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com