ஸ்ரீபெரும்புதூரில் கோடை மழை

ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வந்தனா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென சுமாா் 30 நிமிஷங்களுக்கு கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com