மாணவன் காா்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
மாணவன் காா்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம்: காஞ்சிபுரம் மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம், மே 9: துபையில் நடைபெற்ற ஆசிய இளைஞா் தடகள விளையாட்டுப் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா் எஸ்.காா்த்திகேயனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

துபையில் 21-ஆவது ஆசிய இளைஞா் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஏப். 24 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பி.காம் 2-ஆவது ஆண்டு பயிலும் மாணவா் எஸ்.காா்த்திகேயன் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காா்த்திகேயன் வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயசித்ரா, தடகளப் பயிற்சியாளா் எஸ்.தாஸ் ஆகியோரும் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com