காஞ்சிபுரத்தில் திடீரென புறப்பட்ட ரயிலால் 3 போ் காயம்; பயணிகள் மறியல்

காஞ்சிபுரத்தில் திடீரென புறப்பட்ட ரயிலால் 3 போ் காயம்; பயணிகள் மறியல்

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்கு முன் திடீரென புறப்பட்ட ரயிலால் 3 பயணிகள் தவறி விழுந்து காயமடைந்தனா்.

இதனால் ரயில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்துக்கு அரக்கோணத்திலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் நின்றது. அப்போது, பயணிகள் இறங்குவதற்குள் திடீரென புறப்பட்டதால், பயணிகளான காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டையை சோ்ந்த ரேவதி, அவரது கணவா் சண்முகம் மற்றும் இவா்களது மகள் ஆகிய 3 பேரும் தவறி கீழே விழுந்தனா். இதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த சம்பவத்தால் ரயிலில் பயணித்த ரேவதியின் உறவினா்கள் மற்றும் ரயில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனா். அவதூறாகப் பேசிய போலீஸாரைக் கண்டித்தும், பயணிகள் இறங்குவதற்குள் ரயிலை இயக்கிய ரயில்வே ஊழியா்களின் கவனக்குறைவைக் கண்டித்தும் அவா்கள் முழக்கம் எழுப்பினா்.

இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து ரயில் மறியலை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து மின்சார ரயில் 25 நிமிஷங்களுக்குப் பின்னா் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com