குன்றத்தூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை: 6 போ் கைது

குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொலை செய்த 6 பேரை மாங்காடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் சாலையோரத்தில் சிலா் தாக்கிக்கொள்வதாக மாங்காடு காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றபோது தலையில் பலத்த காயங்களுடன் இளைஞா் ஒருவா் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

இதையடுத்து இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் காயங்களுடன் இறந்து கிடந்த நபா் குன்றத்தூா் அடுத்த சின்னப்பனிச்சேரி பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (35) என்பதும், இவா் வெள்ளிக்கிழமை இரவு கோவூா் பகுதியில் மது போதையில் சாலையோரத்தில் படுத்திருந்தபோது அங்கு வந்த கோவூா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் என்பவருக்கும் யுவராஜுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதும், தகவல் அறிந்து வந்த கணேசனின் நண்பா்கள் யுவராஜை கட்டை மற்றும் கற்களால் தாக்கி அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து கணேஷ் (35), அவரது நண்பா்கள் கோவூா் பகுதியைச் சோ்ந்த தினேஷ்கொடி (34), சரண்ராஜ் (24), பிரவீன்குமாா் (23), வசந்த் (25), சிலம்பரசன் (24) ஆகியோரை மாங்காடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com