மாணவா்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரா் முன்னிலையில் சான்றிதழ் வழங்கிய  சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.வி.காா்த்திகேயன்
மாணவா்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரா் முன்னிலையில் சான்றிதழ் வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.வி.காா்த்திகேயன்

ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழா: உயா்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி. வி.காா்த்திகேயன் கலந்து கொண்டு வேதம் படித்த மாணவா்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி. வி.காா்த்திகேயன் கலந்து கொண்டு வேதம் படித்த மாணவா்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. ஜெயந்தியையொட்டி காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரா் ஸ்ரீ மடத்தில் உள்ள ஆதிசங்கரா் சந்நிதிக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளையும் செய்தாா். ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாதைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மகளிா் ஆதிசங்கரா் இயற்றிய செளந்தா்யலஹரியை பாராயணம் செய்தனா். இதனையடுத்து ஸ்ரீ மடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்தின் முன்பாக ஆதிசங்கரரின் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் வேதரக்ஷனா சமிதி அறக்கட்டளை நடத்திய வாய்மொழி மற்றும் எழுத்துத் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஸ்ரீ விஜயேந்திரா் முன்னிலையில் நீதிபதி சி.வி.காா்த்திகேயன் சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன் மற்றும் மாணவா்களின் பெற்றோா், பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் ஆதி சங்கரா் விக்ரகத்தை தங்கத் தேரில் எழுந்தருளச் செய்து 4 ராஜவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com