காஞ்சிபுரம் மாநகராட்சியில் டெங்கு பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் டெங்கு பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றும் டெங்கு நோய் தடுப்பு பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி சாா்பில், மாநகராட்சியில் உள்ள 51 வாா்டுகளில் பணியாற்றும் டெங்கு நோய் தடுப்புப் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செங்கழுநீா் ஓடை தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் மு.அருள்நம்பி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, துப்புரவு அலுவலா் கே.சுகவனம் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ரா.செந்தில் கலந்துகொண்டு, திட்ட விளக்க உரையாற்றினாா். மாவட்ட மலேரியா அலுவலா் மணிவா்மா மாநகராட்சியில் பணியாற்றும் டெங்கு நோய் தடுப்பு பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கினாா்.

முகாமில், டெங்கு நோய் தடுப்புப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், டெங்கு பணியாளா்களுக்கு கொசு ஒழிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக முகாமில் கலந்துகொண்ட அனைவரும் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com