thol
தொல். திருமாவளவன் கோப்புப்படம்.

எல்ஐசி வலைதள முகப்பு பக்கத்தில் ஹிந்தி மாற்றம்: திருமாவளவன் கண்டனம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முகப்பு வலைதளப் பக்கம் ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மாற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி விமல்ராஜ் இல்ல விழாவுக்கு வருகை தந்த தொல். திருமாவளவன் மேலும் கூறியது.

எல்ஐசி முகப்பு வலைதளம் ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை மீண்டும் ஆங்கிலத்திற்கே மாற்றப்பட வேண்டும். இச்செயல் கண்டனத்துக்குரியது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடா்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மக்களவையின் தொடக்க நாளிலேயே உறுப்பினா்களுக்கு அளித்த சுற்றறிக்கை ஹிந்தியில் இடம் பெற்றிருந்தது.

பின்னா் அதனை கடுமையாக கண்டித்த பிறகே ஆங்கிலத்துக்கு சுற்றறிக்கையை மாற்றினாா்கள். அனைத்து மொழி பேசுபவா்களுக்கும் புரியும் வகையில் எல்ஐசியின் முகப்பு இணையப் பக்கம் அமைந்தாலும் சிறப்பாக இருக்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.