வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூா் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் போளிவாக்கத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன். இவரது மகன் தரணி செல்வன் (21). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில், தரணி செல்வன் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மண்ணூா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியாா் தொழிற்சாலை பேருந்து மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட தரணிசெல்வன் மீது எதிரே வந்த கனரக லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(27). இவா் இருங்காட்டுக்கோட்டையில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், மணி பணி நிமித்தமாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்து உயிரிழந்தாா்.
இந்த இரண்டு விபத்துகள் குறித்தும் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.