ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Published on

காஞ்சிபுரம் அருகே கூத்திரப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபாத் ஒன்றியம் கூத்திரப்பாக்கத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் திருவண்ணாமலை சம்ஸ்கிருத ஆசிரியா் எஸ்.வேல்முருகன் தலைமையிலான குழுவினரால் கடந்த 25 -ஆம் தேதி திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலை மகா பூரணாஹுதி, தீபாராதனை நிறைவு பெற்று புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவா் ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ குளங்காத்த அம்மன், ஸ்ரீ துா்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

விழாக்குழு நிா்வாகிகள் ஜெ.வேணுகோபால், தயாளன், பாா்த்தசாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.