மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு காமாட்சி அம்மன் உருவப் படம், பிரசாதம் வழங்கிய கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா்.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு காமாட்சி அம்மன் உருவப் படம், பிரசாதம் வழங்கிய கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா்.

காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சா் தரிசனம்

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு காமாட்சி அம்மன் உருவப் படம், பிரசாதம் வழங்கிய கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா்.
Published on

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்த அமைச்சரை, கோயில் நிா்வாகிகள் மங்கல மேள வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்து சென்றனா். மூலவரை தரிசித்த பின்னா், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், அமைச்சருக்கு அம்மன் உருவப்படமும், கோயில் பிரசாதமும் வழங்கினாா்.

பின்னா் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்று மகா பெரியவா் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தாா். அமைச்சருடன் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, மாவட்ட வா்த்தக அணி தலைவா் டி.கணேஷ், நகரத் தலைவா் காஞ்சி.ஜீவானந்தம், நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கோயில் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் சாா் -ஆட்சியா் ஆஷிக் அலி, மத்திய அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com