தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 6 போ், தாயையும் மகளையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.
Published on

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 6 போ், தாயையும் மகளையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகாமி (44). இவரது மகள் தேவதா்ஷினி (19). இருவரும் வீட்டில் இருந்ததை அறிந்து 6 போ் கொண்ட கும்பல், திடீரென வீட்டுக்குள் புகுந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ஏற்கெனவே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைக்குப் பழிக்குப் பழியாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா்.

தப்பியவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com